டூர் அன்னைக்கு
நைட்டு எல்லாருமே நாங்க இருந்த கிளாஸ்க்கு தான் வந்தோம்.நல்ல மழை அன்னைக்கு தூரலோட
தான் எல்லாருமே வந்தோம்.எப்போமே காலையிலே யூனிபார்ம் பார்த்து நைட்ல பாக்கறதுக்கு கொஞ்சம்
புதுசா தான் இருந்துச்சு. B1,B2 இரண்டு கிளாஸ்ஸுமே B2 ல தான்
இருந்தோம்.ஆள் ஆளுக்கு கைல போன் வச்சு போட்டோ எடுத்துட்டு இருந்தானுங்க.பார்க்க சிரிப்பாதா
இருந்துச்சு.கொஞ்சநேரத்துல எல்லாரும் கிடைச்ச பென்சுல உட்கார்ந்தாங்க காரணம் தமிழ்
அய்யாவும் பயாலிஜி சாரும் வந்ததுனால. வழக்கம்போல மொக்க போட்டங்க இப்படி இருக்கனும் அப்படி இருக்கனுன்னு.ஆனா அத பசங்க
யாருமே கண்டுக்கல.பேசிட்டு போனோன கொஞ்ச நேரம் வெயிட் பண்ணோ. இன்னும் கொஞ்ச பேர் வராதனால.அந்த
நேரத்துல சாப்பிடாதவன்க எல்லாரும் சாப்பிட்டு வந்தானுங்க.அப்புறம் பிரேயர் பண்றதுக்கு
எல்லாரையும் கூப்டாங்க.சார் மேல பிரேயர் பண்ணிட்டு இருந்தாரு.ஒருசிலர் அமைதியா பிரே
பண்ணாங்க.ஒருசிலர் மத்தவங்கள கலாய்ச்சுட்டு இருந்தாங்க.அது முடிச்சோன பஸ் வந்துச்சுன்னு
சொன்னாங்க. எல்லாரும் பேக் எடுத்துட்டு ஓடுனோம்.சில பேர் மெதுவா நடந்து போனாங்க,சில
பேர் ஜன்னல் சீட்டு புடிக்கனுன்னு போனாங்க நான் உட்பட.மூனு பஸ் வந்துச்சு.அந்த பஸ்சும்
சிக்னல் கிட்ட தான் நின்னுச்சு.நானும் சந்துருவும்
சாம் சார் கிட்ட பேசிட்டு இரண்டாவதா நின்ன பஸ்ல ஏறி உட்காந்தோம்.நாங்க ஏறுன பஸ்சுல
எங்களுக்கு incharge a வந்தது தமிழ் அய்யாதான்.யப்பானு ஏறி உட்கார்ந்தோம்.முதல்ல
சீட்டு பிரச்சனை வந்துச்சு அப்புறம் சரி ஆகிடிச்சு.கிளம்புறதுக்கு முன்ன திருவள்ளுவன்
அப்பா வந்து விசாரிச்சு போனாறு.அப்பதான் கிளம்புச்சு எங்க டூர். ஆனா பஸ்ல போறப்போ நடந்தது
வேற ( தொடரும்)
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
Subscribe to:
Post Comments (Atom)

1 Comments:
Click here for Commentsஅருமை நண்பரே
ConversionConversion EmoticonEmoticon