கல்யாண்ஜி கவிதைகள் -கல்யாண்ஜி

     

           

கவிதை என்பதே கற்பனை , உவமைகளை பயன்படுத்துதல்,எதுகை மோனை என்ற முற்றிலும் மாற்றியவர்கள் சில பேர் , இசை, ஆத்மநாம்,ஞானகூத்தன் போன்றோரை கூறலாம். ஆனால் இவர்கள் கவிதையிலிருந்து பெறமுடியாத ஏதோ ஒன்றை இவரின் கவிதைகளில் காணலாம்.

 

      நான் நா.முத்துகுமாரின் சில கவிதை கட்டுரை புத்தகங்களில்  பெரும்பாலும் இவரின் முன்னுரைகளை பார்த்திருப்பேன். ஏன் இவரிடம் வாங்கினார் இவர் யாரென தேடுகையில் அறிந்தேன் இந்த மாபெரும் எதார்த்த கவிஞனை .அத்தன அழகு ஓர் காற்றை போல பறவையின் இறகை போல வருடும் இவர் கவிதைகள்

 

இவருக்கு இரண்டு பெயர்கள் சிறுகதைக்கு வண்ணதாசன்  கவிதைக்கு கல்யாண்ஜி .உண்மையில் எனக்கு வண்ணதாசன் விட கல்யாண்ஜி  யே

பிடிக்கும். இருப்பினும் அவருடைய சிறுகதைகளை அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாது .கடைசிவரிவரை படித்துவிட்டு அக்கதையிலே மீளாமல் சிறிது நேரம் அதே மனநிலையிலே வைத்திருக்கும் அவருடைய கதைகள்.

 

   எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்வதுண்டு ஓர் கவிதை புத்தகத்தை வாங்கி  அன்றே படித்து முடிப்பதில் என்ன உள்ளது. அதை ஓர் இனிப்பை சுவைப்பதை போல அவ்வப்போது படித்து வைக்க வேண்டும். அதுதான் கவிதை புத்தகத்தை படிப்பதற்கான முறை.

 

    அதுபோலவே மனம் இருளும் நேரங்கள்  மன அழுத்த நேரங்கள்  இவர் கவிதைகளை எடுத்து படிப்பதில் அவை மறைந்ததுபோல இருக்கும்.800 பக்கங்களில் 600 பக்கங்கள் இதுவரை தாண்டி ஒரு வருடமாக படித்துவருகிறேன்.

 

    ஓர் கவிதை புத்தகத்தில் சில பிடித்த கவிதை பக்கங்களை மடித்து வைப்பதுண்டு.ஆனால் இந்த புத்தகத்தில் அது விதி விலக்கே. ஏனெனில்

குறிப்பாக எல்லா பக்கங்களையும் மடிக்கும் எண்ணம் வரலாம்.இது

என்னுடைய கருத்து மட்டுமே.

 

வாழ்ந்து என்னாகபோகிறது

அதற்கு செத்தேவிடலாம்.

செத்தும் தான் என்னாகபோகிறது

அதற்கு வாழ்ந்தே விடலாம்.

 

இந்த கவிதை என்னை மிகவும் சிந்திக்க வைத்து சிறிது புன்முறுவல் வைத்த கவிதை.காரணம் ஒருவன் கடலில் சாகப்போகிறான் .அவன் காலில் இந்த கவிதை கிடைக்கிறது .அவனின் மனஓட்டம் என்னவாக இருக்கும் என்று எனக்கு நானே யோசிப்பதுண்டு.

   நிச்சயமாக அந்த முடிவை கைவிட்டே ஆகவேண்டும் . ஏனெலில் அப்படி ஓர்

கவிதை.எளிய நடை எதார்த்த எழுத்துதான், ஆனால் ஏதோ செய்யும் இவர் கவிதைகள் .

   


 

Previous
Next Post »