The secret - இரகசியம் - Review in Tamil

 



எண்ணம் போல் வாழ்க்கை என்ற ஒன்றை விரிவாகவும் தெளிவாகவும்  பிரபஞ்ச ரகசியங்களை பற்றியும் கூறியுள்ளார் ரோண்டா பைரின் .எனக்கு இந்த புத்தகம் மிகவும் பிடித்தானது.உண்மையில் நிறைய மாற்றங்களை  கண்டுள்ளேன்.

   எனக்கு இந்த புத்தகத்தை பற்றி தெரிந்து ஒரு இரண்டு வருடம் இருக்கும். இருப்பினும் எனக்கே தெரியாமலும் நான் பிரபஞ்சத்திடம் கேட்டது கிடைத்திருக்கிறது.நான் அதை பிறகு தான் கவனித்தேன்.

    முன்பெல்லாம் எனக்கு coding ன் மீது அதிக ஈர்ப்பு இருக்கும் .மேலும் ethical hacking , hacking பற்றி தினமும் தேடிக்கொண்டு இருப்பேன். இப்பொழுது  இல்லை அதை பற்றி கணினியில் தேடுவதும் புத்தகத்தை பார்ப்பதும் வீடியோக்களை பார்ப்பதுமாக இருந்தேன்.

 

   அதை தேடிக்கொண்டே  ஒரு இரண்டு மூன்று மாதம் கடந்துவிட்டேன்.ஆனாலும் அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள அதிகம் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.அப்பொழுது பகுதி நேர வேலைக்கு நான் அதிகம் போவதுண்டு.

 

    அது ஓர் வீட்டு உபயோக பொருட்களுக்கான கண்காட்சி ஒருமாதம் மதியம் தொடங்கி இரவு வரை நடக்கும் .அதில் ஒரு நிறுவனத்திற்காக விளம்பரம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.அதிலும் நிறைய கற்றுக்கொண்டேன்.

 

     இப்பொழுது அதிசயம் என்னவென்றால் அந்த நிறுவனத்தின் மகனும் வந்திருந்தார். அவர் ஓர் கணினியில் மெய்யாக விளையாட்டை விளையாடுவது போன்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதில் சிறுவர்களுக்கு கேமிங் கை காசுக்கு விளையாடுவது போல வைத்திருந்தார்.

      

      நானும் அவரிடம் சகஜமாக பேசுவது போல பேசினேன். அவரும் அவர் தெரிந்த வற்றை கூறினார்.பிறகு தான் புரிந்தது அவர் கணினியில் பெரிய

படிப்பை படித்து  பெங்களூரூரில் பேஸ்புக்கில் இண்டன்ஷிப் வாங்கியவர் என, இது போலவே பல நிகழ்வுகள் பிரபஞ்சத்தின் மூலமாக நடந்துள்ளன

 

    அவற்றை சொல்வது எளிதல்ல .ஏனெனில் இந்த பிரபஞ்ச ரகசியத்தை தெரியாமல் பல தவறை செய்துள்ளேன்.இப்பொழுதே சரியாக திருத்தி வருகிறேன்.

 

     சிலர் புத்தகம் அவரவர் வாழ்வை மாற்றும் என்பார்கள். அவ்வளவில் இந்த புத்தகம் என் குருவே.

Previous
Next Post »