தவிர்த்த எதிபார்ப்பு

கையில் ஒரு நடுக்கம்
முகத்திலிருந்து சிந்துகின்றன
வேர்வை துளிகள்
கொடுத்துவிடலாம் என
மனம்  கூறுகிறது
கொடுத்தால் என்னவாகும்
என  மூளை கூறுகிறது

ஆள் நடமாட்டம் இல்லை
-----------------------------
அந்த வேளையில் ஒரு பதற்றம்
கிட்டே  நெருங்க நெருங்க
அடுத்து என்னவாகுமோ
என்ற பகல் கனவு
ஊர்ந்து  சென்றே
திடீரென முன் நீட்டினேன்

என் பள்ளியில் கொடுத்த
ரேங்க் கார்டை…….
அப்பாவின் அருகினிலே

Oldest