நம்மிடம் நாம் எதை கற்கிறோம்

தெருநாய்களை படம் வரைந்து
அவைகளையே பார்க்க வைத்து
அலற ஓட வைக்கிறான்
பதின்மூன்று வயதொருவன்
தினமும் பார்க்கும்
கிருஷ்ணன் அண்ணன்
இன்றும் வெளியே விளையாடும்
குழந்தைகளுக்கு மிட்டாய்
கொடுத்து கொண்டே இருக்கிறார்
குழாயில் தண்ணீர்
பிடிக்கும் ராணி அக்காள்
அனாதை செடிகளுக்கு
குழாயை திறந்து விட்டே செல்கிறாள்
ஊரோரம் பஞ்சர் ஒட்டும்
கொல்லன் தாத்தா
பஞ்சர் போட்டதின் நினைவாக
ஒரு பூச்செடியை  கையில் திணிக்கிறார்
தெருவிளக்கை சரிசெய்யும்
எலட்டிரிசியன்  அதிகம் தலைகுனிந்த
தூக்கி வெளிச்சம் ஏற்றுகிறார்
மூட்டை தூக்கும் நண்பர் ஒருவர்
பணத்தில் பாதியை  புத்தகம்
வாங்கியே செலவிடுகிறார்
நம்மிடையே பல கவிதைகள்  வாழ்ந்து கொண்டு
இருக்கையில்  கற்பனைகளை  செதுக்கி
எழுதவேண்டுமா என்ன…
தினமோ எதேர்ச்சியாகவோ
பார்க்கும் மனிதர்களிடம்
ஏதோ ஒரு நற்குணம்  வாழத்தான் செய்கிறது
நம்மிடம் ?
நாம் அதை கற்கிறோமா ?
Previous
Next Post »