ஆசை ஆற்றில் நீந்திய குழந்தை

அந்த பிஞ்சு முகத்தின்
ஆசை பொறியில்  கேட்பாரற்று
கூப்பாடுகள் நிறைந்து
பேரண்ட மகிழ்ச்சியில்  சிக்கி
உறவாடுகிறது அணை போட
மறந்த மனது.
விடியல் மையம் அவன் முக
அன்பின்  பரிவர்த்தனையில்
துவங்குகிறது.
நரம்புகளின்  துடிப்பில்
உன் சிரிப்புச்சத்தம்
சன்னமாக ஒலித்தவாறே
யுகத்தை கடக்கிறது
அமுதின் தூய  விரல்களை
மொத்தம் வருடுகையில்
என்ன இந்த  உடல் கொதித்துறுகியதா ?
அந்த ஸ்பரிசத்தில்
வரமெடுத்து தங்கிவிட்டதா?
சொல்லடா…
என் வாழ்வின் மந்தாரிகனே.
Previous
Next Post »