கடவுளின் நாக்கு - நூல் விமர்சனம்

  

இந்த புத்தகத்தை முடித்து வைக்கியில்  வாழ்வை பற்றியும் அதனோடு பிணைந்த கதைகளை பற்றியும்  மிகுந்த ஆர்வத்தோடு படித்தேன்.உண்மையில் கதைகள் என்பவை மனித வாழ்வை சீர்படுத்த வந்தவை. கதைகள் எப்படி தோன்றினாலும் அது ஏற்படுத்தும்  மாற்றங்கள்  இன்றியமையாதவையே.உலகெங்கிலும்  மூலைமுடுக்கில் வாழும் எல்லா குடிகளிலும் நீதிநெறிக்காக கதைகள் கூறப்படுகின்றன.அவை ஓர்  கரையை தொடும் அலைகள் போல என்றும் புதிது புதிதாய் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன.ஒவ்வொரு நாளும் அதன் வீரியமும் கூடிக்கொண்டேயிருக்கின்றன.எஸ்.ரா வின் நடையில் இந்த கட்டுரைகளோடு கூடிய கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.பெரும்பாலும் பறவைகள் விலங்குகளே கதைகளின் பாத்திரங்களாக இருந்தாலும் அந்த உலகத்தில் வாழ்வதும் பிடித்திருந்தது. அவ்வளவு சீக்கிரம் சலித்து விடாது.எத்தனை கதைகள் அப்பா ! இன்னும் இருக்கின்றன அதற்கான இணைய வாசலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது உதவியாக உள்ளது.நிச்சயம் கிடைத்தால் வாசித்து பாருங்கள்.ஓர் புதிய கதைகளின் உலகிற்கு நீங்கள் நுழையலாம்……..
Previous
Next Post »

2 Comments

Click here for Comments
Anonymous
admin
April 4, 2020 at 7:49 PM ×

அருமை நண்பா கண்டிப்பாக வாசிக்கிறேன்.

Reply
avatar